Search This Blog

Thursday, April 23, 2015

அருள்மிகு செண்பகவல்லி அம்பாள்

 
அருள்மிகு செண்பகவல்லி அம்பாள்
அறிய புகைப்படம் 
அருள்மிகு செண்பகவல்லி அம்பாள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அருள்மிகு செண்பகவல்லி பூவனாதர் திருக்‌கோயில் அமைந்துள்ளது.

அருள் தரும் அம்பிகை செண்பகவல்லி அம்பாள் 7 அடி உயரத்தில் எழில் ‌‌கொஞ்சும் தோற்றத்துடன் காட்சி தருகிறார்.

கிழக்குப் பார்த்தபடி இறைவனும் இறைவியும் காட்சி தரும் ஆலயங்களில் இதுவும் ஒன்று. பஞ்சமுக விநாயகர், சண்முகர், துர்கை, கன்னி விநாயகர், மகாலட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரும் தனிச் சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். அகத்திய முனிவர் உருவாக்கிய அகத்திய தீர்த்தம் இந்தக் கோயிலின் சிறப்புகளில் ஒன்று.

இக்கோயிலின் தல சிறப்பு , இங்கு மட்டும் நிற்கும் அம்பாளை உட்கார்ந்துள்ளது போல அலங்காரம் செய்கிறார்கள்.

மது‌‌ரையில் எப்படியோ அதுபோல் இங்கு அம்பாளுக்குத்தான் முக்கியத்துவம். இந்த சன்னதி நு‌ழைவாயிலில் பிரம்மாண்டமான துவாரபாலகிகள் காணப்படுகின்றனர். மூல விக்ரகம் எப்படியுள்ள‌தோ அப்படியேதான் அலங்காரம் செய்வது எல்லா கோயில்களிலும் உள்ள வழக்கம். இங்கு மட்டும் நிற்கும் அம்பாளை உட்கார்ந்துள்ளது போல அலங்காரம் செய்கிறார்கள். இராமபிரான் சிவ வழிபாடு செய்த பெருமை உடையது. சதுங்கன், பதுமன் என்ற இரு பாம்புத் தலைவர்கள் இறைவனைப் பூவனப் பூக்களால் அர்ச்சித்ததால் இறைவன் பூவனநாதர் என பெயர் பெற்றார்.

தல வரலாறு 

ஈசன் திருமணத்தின் போது வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்த நிலையில் உலகைச் சமன்செய்யும் பொருட்டு இறைவன் ஆணைப்படி அகத்தியர் பொதிகை நோக்கிப் பயணமானார். வழியில் எதிர்த்த அரக்கர்களான வாதாபி மற்றும் விலவனன் ஆகிய‌ேரை வதைத்தனால் உண்டான பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார். பொன்ம‌லை முனிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அகத்தியர் தீர்த்தத்தை ஏற்படுத்திவிட்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார். வெள்ளிமலை சிவக்குழவைச் சார்ந்த வாமனன் நந்திதேவரின் சாபத்தால் வெம்பக்‌ கோட்டையில் ‌வேந்தனாகப் பிறந்து செண்பக மன்னன் எனப் பெயர் பெற்றான். இறைவன் ஆணைப்படி கோவிற்புரியையும் பூவனாதருக்‌கு கோவிலும் அமைத்து சாபநிவர்த்தி பெற்றான். செண்பக மன்னனால் தோற்றுவிக்கப்பட்ட இத்திருக்கோயிலில் அம்பாள் செண்பகவல்லி என்று பெயர் பெற்றாள். உள்ளமுடையான் ( ஒளி நூற் புலவர் கி.பி.1029க்கு முற்பட்டவர்) என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.

நன்றி : தினமலர்